தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ உள்விளையாட்டு அரங்க போட்டிகள்

உள்விளையாட்டு அரங்க போட்டிகள்

உள்விளையாட்டு அரங்க போட்டிகள்


ADDED : செப் 29, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, செப்.30–தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் அன்னை தெரசா மகளிர் பல்கலையின் கீழ் இயங்கும் கல்லுாரிகளுக்கிடையேயான உள்விளையாட்டு அரங்க போட்டிகள் நடந்தது. துவக்க விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இணைச்செயலாளர் வன்னியராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போட்டியில் 8 கல்லுாரிகளைச் சேர்ந்த 65 பேர் பங்கேற்றனர். செஸ்போட்டியில் என்.எஸ்., கல்லுாரி மாணவி அபிநயா, மேஜைபந்து போட்டியில் கம்பம் ஸ்ரீஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லுாரி, இறகுபந்து போட்டியில் அன்னைதெரசா கல்லுாரி அணிகள் முதலிடம் வென்றன. கல்லுாரி இணைச்செயலாளர் வன்னிராஜன், பல்கலை உடற்கல்வி இயக்குநர் ராஜம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us