தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியாறு அணைக்கு நீர்வரத்து 'ஜீரோ' ஆனது

பெரியாறு அணைக்கு நீர்வரத்து 'ஜீரோ' ஆனது

பெரியாறு அணைக்கு நீர்வரத்து 'ஜீரோ' ஆனது


ADDED : பிப் 09, 2024 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்,:முல்லைப் பெரியாறு அணையில் 10 மாதத்திற்கு பின் நீர்வரத்து 'ஜீரோ' ஆனது.

இந்த அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் ஜூனில் துவங்கிய தென்மேற்கு பருவ மழையும், நவம்பரில் துவங்கிய வடகிழக்கு பருவ மழையும் கூடுதலாக பெய்யவில்லை. அதிகபட்சமாக வடகிழக்கு பருவமழையால் டிச.,23 ல் நீர்மட்டம் 141 அடியை எட்டியது.

கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் அணைக்கு நீர்வரத்து ஜீரோவாக இருந்த நிலையில் அதன்பின் அவ்வப்போது பெய்து வந்த மழையால் தொடர்ந்து நீர்வரத்து இருந்தது. டிச.,19ல் அணைக்கு நீர் வரத்து அதிகபட்சமாக வினாடிக்கு 7404 கன அடியாக இருந்தது.

இந்நிலையில் 10 மாதத்திற்கு பின் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 'ஜீரோ' ஆனது. நீர்ப்பிடிப்பு பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர்மட்டமும் வெகுவாக குறைந்து 133 அடியாக இருந்தது 'மொத்த உயரம் 152 அடி'.

தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக 511 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 5399 மில்லியன் கன அடியாகும். தற்போதுள்ள அணை நீர்மட்டம் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு போதுமானதாக இருந்த போதிலும் கோடை மழை பெய்தால் நீர்மட்டம் சற்று உயர்ந்து ஜூனில் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்படும்.

பவானிசாகர் 77.46 அடியாக சரிவு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், கடந்த ஜன.,7 முதல், கீழ்பவானி இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது.இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று முன் தின நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து, 226 கன அடியாக இருந்தது. மேலும் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால், அணையின் நீர் மட்டம் சரிந்து வருகிறது. அணை நீர்மட்டம், 77.46 அடி, நீர் இருப்பு, 14.3 டி.எம்.சி., ஆக உள்ளது.அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி தண்ணீர், அரக்கன் கோட்டை தடப்பள்ளி பாசனத்துக்கு, 700 கன அடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக, 100 கன அடி என மொத்தம், 3,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட, வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us