ADDED : பிப் 09, 2026 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் கல்வியியல் கல்லுாரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு, புத்தாக்க நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
பள்ளிக்கல்வித்துறை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இணைந்து பயிற்சியை நடத்தினர். 19 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பிரபாகரன் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமை தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக திட்ட மேலாளர் சுந்தரேஸ்வரன் ஒருங்கிணைத்தார்.

