தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்ஸ்டாகிராம் காதலால் சாப்ட்வேர் இன்ஜி., தற்கொலை

 இன்ஸ்டாகிராம் காதலால் சாப்ட்வேர் இன்ஜி., தற்கொலை

 இன்ஸ்டாகிராம் காதலால் சாப்ட்வேர் இன்ஜி., தற்கொலை


ADDED : செப் 19, 2026 02:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 02:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சின்னமனூர்: தேனி மாவட்டம், சீலையம்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் விக்னேஷ் 25, இன்ஸ்டாகிராம் காதலால் தற்கொலை செய்து கொண்டார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

சீலையம்பட்டி பழனிவேல் மகன் விக்னேஷ் 25 , இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார்.

அங்கு பணியாற்றிபோது திருவாரூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயது பெண்ணை இன்ஸ்டாகிராமில் காதலித்துள்ளார். அப் பெண்ணின் குணநலன் பிடிக்காததால் ஒதுங்கினார்.

ஆனால் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று 'டார்ச்சர்' செய்வதாக கூறி, செப்., 15 ல் சீலையம்பட்டியில் தனது வீட்டில் விக்னேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

தற்கொலைக்கு முன் தனது மரணத்திற்கு காதலித்த பெண் அவரது தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.

விக்னேஷ் உடலை சின்னமனுார் போலீசார் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை செய்த உடலை வாங்க குடும்பத்தார் மறுத்து வருகின்றனர். எப்.ஐ.ஆரில் தற்கொலை செய்து கொண்ட விக்னேஷின் கடிதத்தை சேர்க்கவும், சம்மந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி நேற்று மாலை சீலையம்பட்டி -தேனி மெயின் ரோட்டில் விக்னேஷின் குடும்பத்தினர், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் தேனி- கம்பம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி எஸ்.பி., பிரவீன் கவுதம் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us