தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/விதைப்பிற்கு முன் விதைப்பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்

விதைப்பிற்கு முன் விதைப்பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்

விதைப்பிற்கு முன் விதைப்பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 03:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 03:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: விதைப்பிற்கு முன் விதைகளை பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேனி விதை பரிசோதனை அலுவலர் சிவகாமி, மூத்த வேளாண் அலுவலர் சதீஸ், வேளாண் அலுவலர் மகிஷா தேவி தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: தரமான விதையானது மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச புறத்துாய்மை, இனத்துாய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம், நலத்துடன் கூடிய வீரியம் கொண்டிருக்க வேண்டும். விதைக்க உள்ள விதைகளில் மேற்குறிப்பிட்டவை பற்றி தெரிந்து கொள்ள பரிசோதனை செய்வது அவசியமாகும். உதாரணமாக கம்பு, எள், கேழ்வரகு பரிசோதனை செய்ய 25 கிராம் விதை, தக்காளி, மிளகாய், கத்தரி உள்ளிட்டவை பரிசோசதிக்க 10 கிராம், நெல், கீரை, முள்ளங்கிக்கு 50 கிராம், சோளம், வெள்ளரி, பூசணி, வெண்டை, பாசிப்பயறு, கொள்ளு சீனி அவரை உள்ளிட்டவைக்கு 100 கிராம், துவரை, தட்டைபயற, பருத்தி, பீர்க்கு ஆகியவற்றிற்கு 150 கிராம், நிலக்கடலை, மக்காச்சோளத்திற்கு 500 கிராம் என பயிர்களை பொறுத்து பரிசோதனைக்கு விதைகளின் மாதிரி தேவை மாறுபடும். விதை மாதிரியுடன் பெயர், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் ரூ.80 செலுத்த வேண்டும். நேரடியாகவோ, தபால் மூலமோ விதைகளை ‘மூத்த வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், தேனி விற்பனை குழு அலுவலக வளாகம், முதல்தளம், பெரியகுளம் ரோடு, சுக்குவாடன்பட்டி 625 531 ’ என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us