தேனி மேம்பால பணி பிரச்னை விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
தேனி மேம்பால பணி பிரச்னை விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
ADDED : ஆக 18, 2026 08:20 PM

தேனி, ஆக. 19–
அரண்மனைபுதுார் ரயில்வே மேம்பால பணிக்கு அனுமதி கேட்டு ‘முதலில் விண்ணப்பியுங்கள்’ என தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு மாவட்ட வன அலுவலர் கிரண் பதில் அளித்துள்ளார்.
அரண்மனைபுதுார் அருகே மதுரை–கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.92 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி சில ஆண்டுகள் முன்பு துவங்கியது. இப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இது பற்றி நெடுஞ்சாலை துறையிடம் விசாரித்தபோது, ‘வனத்துறை அனுமதி வழங்காததால் புது பஸ் ஸ்டாண்ட் நோக்கி இறக்கும் மேம்பாலம் கட்டமுடியவில்லை,’ என்றார்.
இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் கிரண் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை சார்பில் அரண்மனை புதுார் மேம்பாலப்பணிகளுக்கு அனுமதி கேட்டு வனத்துறைக்கு எந்த கடிதமும் வரவில்லை. வனப்பகுதி நிலம் தேவைப்பட்டால் அதற்கான சரியான காரணத்தை ‘பர்வேஸ்’ இணைய தளத்தில் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர் தான் வனத்துறை அனுமதி வழங்க முடியும். இதுபற்றி தெரிந்தும், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் வனத்துறை மீது தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். வனத்துறை அனுமதி வழங்க எப்போதும் தயார். முதலில் விண்ணப்பியுங்கள் என்றார்.
