UPDATED : செப் 02, 2026 08:45 PM
ADDED : செப் 02, 2026 08:40 PM
அ நிறம் | அளவு
தேனி:தமிழக அரசு சார்பில் மத்திய அரசின் தேர்வாணைய போட்டிகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவித்தொகையாக 10 மாதங்களுக்கு ரூ.
7500 வழங்கப்பட உள்ளது. உதவித்தொகை பெற போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்கான தேர்வு செப்., 6ல் தேனிநாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இத்தேர்வு எழுத 234 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் காலை 9:30 மணிக்கு முன் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும். ஹால் டிக்கெட்டுடன் ஆதார், பான்கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆளறி சான்று அசல் எடுத்து வர வேண்டும் என பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
