தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ விவசாயிகள் அடையாள எண் பெற அறிவுறுத்தல்

 விவசாயிகள் அடையாள எண் பெற அறிவுறுத்தல்

 விவசாயிகள் அடையாள எண் பெற அறிவுறுத்தல்


ADDED : மார் 11, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: வேளாண் துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உழவர் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.

பயிர்சாகுபடியை கணக்கிட வேளாண் துறையால் ஆண்டிற்கு மூன்று முறை பயிர் கணக்கீடு பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அது தவிர வேளாண் நில விவரங்களை உள்ளடக்கி விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த அடையாள எண் பெறுவதற்கு விவசாயிகள் ஆதார், நிலப் பட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் 54,203 விவசாயிகள் கணக்கிடப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 41,736 பேர் மட்டும் விவசாய அடையாள எண் பெற்றுள்ளனர்.

மற்றவர்கள் விண்ணப்பிக்கவில்லை. இவர்களை தேடி கண்டுபிடித்து விவசாய அடையாள எண் வழங்க துறை அலுவலர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் மானியத்திட்டங்களில் பயன்பெற விவசாய அடையாள எண் முக்கியம்.

இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஆவணங்களை சமர்பித்து அடையாள எண் பெறலாம் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us