/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொழிலாளர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்
/
தொழிலாளர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்
ADDED : பிப் 19, 2026 06:41 AM
தேனி: தொழிலாளர் நலத்துறையின் கீழ் கட்டுமான, ஆட்டோ ஓட்டுநர்கள், கிக் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்களுக்கு நலவாரியங்கள் செயல்படுகின்றன.
இந்த வாரியங்கள் மூலம் தொழிலாளர்கள், குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகின்றன.
நலவாரியங்களில் தினக்கூலி, ஊதியத்தில் பி.எப்., இ.எஸ்.ஐ., பிடித்தம் இல்லாத பணியாளர்கள் பதிவு செய்யலாம்.
தொழிலாளர்கள் ரேஷன்கார்டு, ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் வைத்து www.tnwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகம் அருகே கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள தொழிலாளர் நலத்துறையை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

