4 நிறங்களில் குப்பை தொட்டி பயன்படுத்த அறிவுறுத்தல்
4 நிறங்களில் குப்பை தொட்டி பயன்படுத்த அறிவுறுத்தல்
UPDATED : ஜூலை 01, 2026 03:14 PM
ADDED : ஜூலை 01, 2026 03:00 PM
தேனி:திடக்கழிவு மேலண்மை திட்டப்படி நான்கு நிறங்களில் குப்பை தொட்டி பயன்படுத்தி தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தேனி நகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிறுவனங்கள், கடைகளில் இதுவரை நீலம், பச்சை நிறத்தில் குப்பைத்தொட்டிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு வந்தது. அதில் நீல நிற தொட்டியில் மக்காத கழிவுகளும், பச்சை தொட்டியில் மக்கும் குப்பையை பிரித்து வழங்க அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில் புதுப்பிக்கப்பட்ட திடக்கழிவு மேலண்மை திட்ட விதிகளின் படி நிறுவனங்களில் பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு ஆகிய நான்கு நிறங்களில் குப்பை தொட்டிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டள்ளது.
இது பற்றி அதிகாரிகள் கூறுகையில், 'முன்பு குப்பையை இரண்டாக பிரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டு வந்தது. தற்போது நான்காக அதாவது பச்சை தொட்டியில் மக்கும் குப்பை, நீல நிறத்தில் மக்காத குப்பை, கருப்பு நிறத்தில் எலக்ட்ரிக்கல் குப்பைகள், சிவப்பு நிறத்தில் நாப்கின், டயப்பர் உள்ளிட்டவை பிரித்து வழங்க வேண்டும். இவ்வாறு பிரித்து வழங்குமாறு பெரிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். மேலும், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றிலும் இதனை அமல்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். இந்த விதிகள் மாற்றம் தொடர்பாக வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்,' என்றனர்.
