ADDED : பிப் 11, 2026 07:00 AM
தேனி: மாவட்டதில் சுமார் 6.13 லட்சம் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. வெள்ளை கழிச்சல் நோய் கோழிகளில் உயிர் சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்நோய் நியூகேசில் அல்லது ராணிக்கேட் நோய் என அழைக்கப்படுகிறது. காற்றில் உள்ள நச்சுயிரி துகள்களை சுவாசிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. சுவாச மண்டல நோயாக வெளிப்பட்டு, நரம்பு மண்டல கோளாறு, கழிச்சல் ஏற்படுத்தும். முட்டை உற்பத்தி குறைவு, தீவனம் எடுத்துக்கொள்ளும் அளவு குறைதல், கண்கள் சிவந்து வீங்குதல், கால்கள், இறக்கை முடக்கம் இந்நோயின் அறிகுறியாகும்.
இந்நோயை தடுக்க மாவட்டத்தில் உள்ள 3 கால்நடை மருத்துவமனைகள், 53 கால்நடை மருந்தகங்கள், 46 கிளை கால்நடை நிலையங்களில் வெள்ளைக்கழிசல் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 8 வயதுடைய கோழிகளுக்கு தடுப்பூசி பிப்., 14 வரை இலவசமாக போடப்படுகிறது. வாரந்தோறும் சனி அன்று கால்நடை நிலையங்களில் இத்தடுப்பூசி போடப்படுகிறது. கோழி வளர்ப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
