மறுஓட்டுப்பதிவு கோருவோர் ஆதாரம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
மறுஓட்டுப்பதிவு கோருவோர் ஆதாரம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
ADDED : ஏப் 25, 2026 04:23 PM
தேனி:மறுஓட்டுப்பதிவு கோரும் வேட்பாளர்கள் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என வேட்பாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் கல்லுாரியில் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளது. ஓட்டுப்பதிவில் பயன்படுத்திய இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட பின் மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் வேட்பாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பதிவான ஓட்டு விபரங்கள், வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து பிற ஆவணங்கள் வழங்கி ஓட்டளித்த வாக்காளர் விபரங்கள், ‛டெண்டர்' ஓட்டுப்பதிவு விபரங்கள், இயந்திரங்கள் பழுது உள்ளிட்ட விபரங்கள் தெரிவித்தார். வேட்பாளர்கள் ஏதாவது ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு நடத்த கோரினால் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
