ADDED : பிப் 01, 2026 06:07 AM

அ நிறம் | அளவு
தேனி: மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வர் இளைஞர் விளையாட்டு திருவிழா- இது நம்ம ஆட்டம் 2026 மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள், பொதுப்பிரிவில் ஒவியம், பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது.
விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 100 மீ., ஓட்டம், குண்டு எறிதல், உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. போட்டிகள் துவக்க விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.
