நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலைக் கல்லுாரி நுண்ணுயிரியல், விலங்கியல், உயிர்வேதியியல் துறைகள் சார்பாக அறிவியலையும் ஆய்வுகளையும் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.
சீனா செஞ்சியாங் உணவு, உயிரியல் பொறியியல் பள்ளி ஆராய்ச்சியாளர் சிவபிரகாஷ், விசாகப்பட்டினம் டாக்டர் ரெட்டி ஆய்வக தலைவர் நடராஜன், தேசிய வைராலஜி ஆராய்ச்சியாளர் பாலசுப்ரமணியன், சிவகாசி ஏ.ஜே., கல்லுாரி நுண்ணுயிரியல் துறை தலைவர் பிரபு, யூ.எஸ்.ஏ., பயோமெரியஸ் ஆய்வாளர் தாரணிதேவி, உள்ளிட்டோர் பேசினர்.
கருத்தரங்கில் பிரான்ஸ், தென் ஆப்ரிக்கா, கொரியா நாடுகளில் இருந்து 6 மாணவிகள் இணையம் மூலமும், 13 கல்லுாரிகளைச் சேர்ந்த 95 பேர் என மொத்தம் 480 மாணவர்கள் பங்கேற்றனர்.