ADDED : அக் 17, 2025 01:52 AM
ஆண்டிபட்டி: பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் சார்பில் சர்வதேச தொழில் நுட்ப கருத்தரங்கு நடந்தது. கல்லூரி குழும தலைவர் மோகன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா, சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் அருள்குமார் வரவேற்றார்.
அண்ணா பல்கலை மதுரை மண்டல இயந்திரவியல் துறை பேராசிரியர் தர்மராஜா பேசினார். தமிழகம் உட்பட வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த பொறியியல் கல்லுாரிகளில் இருந்து இயந்திரவியல், கம்ப்யூட்டர், சிவில், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொடர்பு துறை, எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
மொத்தம் 980 ஆராய்ச்சி கட்டுரைகளில் 290 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கருத்தரங்கு ஏற்பாடுகளை எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் பவுன்ராஜ் செய்திருந்தார்.
முதுநிலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் துறை தலைவர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டன.