/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இருவாச்சி பறவைகள் கணக்கெடுப்பு துவங்குகிறது
/
இருவாச்சி பறவைகள் கணக்கெடுப்பு துவங்குகிறது
ADDED : ஜன 02, 2026 05:38 AM
கம்பம்: ஸ்ரீ வி. மேகமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட 3 புலிகள் காப்பகங்களில் இருவாச்சி (Hornbill) பறவைகள் கணக்கெடுப்பு சில நாட்களில் துவங்க உள்ளது.
சுற்றுச் சூழல் மாசுபடாமல் இருக்க வனப்பகுதிகள், வன உயிரினங்கள் அழிவில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். வன உயிரினங்களின் கணக்கெடுப்பின் மூலம் உறுதி செய்து அதன் மூலம் மட்டுமே, வனத்தையும் வன உயிரினங்களையும் காக்க முடியும்.
தமிழக அரசு கடந்த 2025 மார்ச்சில் இருவாச்சி பறவைகளின் பாதுகாப்பு மற்றும் அழிவிலிருந்து காக்கும் நடவடிக்கையை துவக்கியது. அதன் முதல் படியாக ஆனைமலை , ஸ்ரீவி. மேகமலை, களக்காடு - முண்டந்துறை ஆகிய 3 புலிகள் காப்பகங்களில் இருவாச்சி பறவைகள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த மூன்று புலிகள் காப்பகங்களிலும் இருவாச்சி பறவைகள் கணிசமாக காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களில் இதன் கணக்கெடுப்பு துவங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவாச்சி பறவைகளில் கிரேட் கார்ன்பில், தி மலபார் கிரே கார்ன்பில், தி இந்தியன் கிரே கார்ன்பில், மலபார் பைட் கார்ன்பில் என நான்கு வகைகள் உள்ளன. இந்த கணக்கெடுப்பிற்கென வனப் பணியாளர்களுக்கு வால்பாறையில் பயிற்சி வழங்கப்பட்டது. இப் பயிற்சியை நேச்சர் கன்சர்வேசன் பவுண்டேசனின் விஞ்ஞானிகள் வழங்கியுள்ளனர்.
இது குறித்து மேகமலை புலிகள் காப்பக வட்டாரங்களில் விசாரித்த போது, 'இருவாச்சி பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி 2026 மார்ச்சில் முடிக்கப்படும். ஒரு வாரத்தில் கணக்கெடுப்பு துவங்கும்,' என்றனர்.

