/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குண்டும், குழியுமாக மாறிய ரோட்டில் விளை பொருட்களை கொண்டு வர சிரமம்
/
குண்டும், குழியுமாக மாறிய ரோட்டில் விளை பொருட்களை கொண்டு வர சிரமம்
குண்டும், குழியுமாக மாறிய ரோட்டில் விளை பொருட்களை கொண்டு வர சிரமம்
குண்டும், குழியுமாக மாறிய ரோட்டில் விளை பொருட்களை கொண்டு வர சிரமம்
ADDED : அக் 02, 2024 07:22 AM

போடி : சில்லமரத்துப்பட்டி - பெருமாள் கவுண்டன் பட்டி செல்லும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் விளை பொருட்களை கொண்டு வர விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியை சேர்ந்தவர்கள் மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட வசதிக்காக 2 கி.மீ., தூரம் உள்ள சில்லமரத்துப்பட்டிக்கு வர வேண்டும். அல்லது 5 கி.மீ., தூரம் உள்ள போடிக்கு வர வேண்டும். பெருமாள்கவுண்டன்பட்டியில் இருந்து சில்லமரத்துப்பட்டி செல்ல ரோடு அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது.
தற்போது டூவீலர் கூட செல்ல முடியாத அளவிற்கு கற்கள் பெயர்ந்து குண்டும், குழியமாக உள்ளது.
பெருமாள் கவுண்டன்பட்டியில் இருந்து சில்லமரத்துப்பட்டிக்கு பஸ் வசதி இல்லை. இதனால் சேதம் அடைந்த ரோட்டில் மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு செல்லவும், மக்கள் மருத்துவ வசதி பெறவும், விளை பொருட்களை கொண்டு வரவும் சிரமம் அடைகின்றனர்.
விளக்கு வசதி இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்த நிலையில் சேதம் அடைந்த ரோடால் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர்.
சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. குண்டும், குழியுமான ரோட்டை சீரமைத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.