/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீபாவளி அன்று செல்லப் பிராணிகளை பாதுகாப்பது அவசியம்! கால்நடை அறிவியல் மருத்துவ கல்லுாரி வேண்டுகோள்
/
தீபாவளி அன்று செல்லப் பிராணிகளை பாதுகாப்பது அவசியம்! கால்நடை அறிவியல் மருத்துவ கல்லுாரி வேண்டுகோள்
தீபாவளி அன்று செல்லப் பிராணிகளை பாதுகாப்பது அவசியம்! கால்நடை அறிவியல் மருத்துவ கல்லுாரி வேண்டுகோள்
தீபாவளி அன்று செல்லப் பிராணிகளை பாதுகாப்பது அவசியம்! கால்நடை அறிவியல் மருத்துவ கல்லுாரி வேண்டுகோள்
ADDED : அக் 19, 2025 09:49 PM
தீபாவளியை கொண்டாடும் அதே வேளையில் நம் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், செல்லப்பிராணிகளுக்கு வெடி வெடிப்பதால் பயத்தை ஏற்படுத்தாமல் இருப்பது நம் கடமையாகும்.
இந்த விழிப்புணர்வு இன்றி வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் உட்பட செல்லப்பிராணிகள் ஒலி, ஒளி அலைகளால் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது.
இதுகுறித்து விரிவாக பொது மக்கள் இடையே தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, தேனி தப்புக்குண்டு தமிழ்நாடு கால்நடை அறிவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
கால்நடை மருத்துவக்கல்லுாரி முதல்வர் பொன்னுதுரை கூறியதாவது: நம் செல்லப்பிராணிகளை பாதுகாப்பது நம் கடமை என்பதை யாவரும் உணர வேண்டும்.
நாய்கள்,பறவைகள், விலங்குகளுக்கு சத்தத்தை கேட்கும் திறன் அதிகம். தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் போது திடீரென உண்டாகும் ஒலியை கேட்டு,பதற்றம் அடைந்து, மூச்சிரைத்து, செல்லப்பிராணிகள் பயப்படும். இதனால் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், கட்டில் மேஜை, நாற்காலி போன்றவற்றின் அடியிலும், வீட்டில் உள்ள மறைவான பகுதியிலும் ஒளிந்து கொள்ளும். பூனைகள் அலமாரி, மெத்தை, போர்வைகளுக்குள் மறைந்து கொள்ளும். பறவைகளால் வெளியிடப்படும் இயல்பான சப்தங்கள் முற்றிலும் மாறுபட்டு அபயக்குரலாக ஒலிக்கும்.
சமூக நாய்கள் (தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள்) பட்டாசு வெடிக்கும் போது பயத்தின் காரணமாக, தங்களது வழக்கமான வாழ்விடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு ஓடிச்சென்றுவிடும். திடீர் சப்தத்தால் அவைகள் வியப்புடன்கோபம் கொள்ளவும் வாய்ப்புக்கள் உண்டு.
உடனடி சிகிச்சை வசதி தப்புக்குண்டில் இயங்கும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அனைத்து வசதிகளும் உள்ள சிகிச்சை மையம் இயங்குகிறது. இங்கு பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகளுக்கு உடனடி சிகிச்சை, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பல பிராணிகள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இதில் நாய், பூனை, குதிரை, எருது, பசுமாடு, வன விலங்கிலான குரங்கு உள்ளிட்டவையும் காப்பாற்றப்பட்டுள்ளன. அதனால் தாராளமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள செல்லப்பிராணிகள் வளர்ப்போர் தொடர்பு கொள்ளலாம்.
இந்நேரங்களில் செல்லப்பிராணிகளிடம் வழக்கத்தை விட அன்பாக பேசிப் பழகி, அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம்., என்றார்.