/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீபாவளி ஸ்வீட் விற்பனை பதிவு செய்வது அவசியம் தினமலர் செய்தி எதிரொலி

ADDED : அக் 14, 2025 04:30 AM
தேனி: தீபாவளியை முன்னிட்டு ஸ்வீட், காரம் தயாரித்து விற்பனை செய்வோர் உணவுப்பாதுகாப்புத்துறையில் பதிவு செய்வது அவசியம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தீபாவளியை முன்னிட்டு ஸ்வீட், காரம் அனைத்து தயாரிப்பாளர்களும் உணவுப்பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று விநியோகம் செய்வது கட்டாயம் தின்பண்டங்களை சுத்தமான, சுகாதாரமான முறையில் தயாரித்து விற்க வேண்டும்.
விற்பனை செய்யும் பொருட்களில் முகவரி, தயாரிப்பு, காலாவதிதேதி, உரிமம் எண், சைவ, அசைவ குறியீடு குறிப்பிட்டிருக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் https: foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
உணவுப்பொருட்கள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண், unavupukar@gmailcom என்ற முகவரில் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.