ADDED : மே 14, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் சென்னை ஜீயல் அசோசியேட்ஸ் சார்பில் வளாகத்தேர்வு நடந்தது. ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார்.
ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் வரவேற்றார். ஜீயல் நிறுவன நிர்வாகி கார்த்திகேயன் மாணவர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தினார்.
ஐ.டி.ஐ., பயிற்றுநர் சேகர் நன்றி கூறினார். பிட்டர், எலக்ட்ரிசியன், ஒயர்மேன், வெல்டர் பாடப்பிரிவுகளில் படித்த 76 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 18 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
