ADDED : டிச 14, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி பங்களா மேட்டில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது
. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுல்தான், ரவிக்குமார், சுரேந்தர், மோகன், அன்பழகன், செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்போரட்டத்தில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள், வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.

