ADDED : மார் 15, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.
முகாமில் 10ம் வகுப்பு அதற்கும் குறைந்த கல்வித்தகுதி உடையவர்கள், பிளஸ் 2, ஐ.டி.ஐ., பட்டயபடிப்பு, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள், தையல்பயிற்சி முடித்தவர்கள் பங்கேற்கலாம்.
வேலை நாடுநர்கள் சுயவிவர குறிப்பு, கல்விச்சான்றிதழ்கள் நகலுடன் முகாமில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 97153 26379 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

