/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'கல்தார்' மருந்தால் மா மர வளர்ச்சி பாதிக்கும்
/
'கல்தார்' மருந்தால் மா மர வளர்ச்சி பாதிக்கும்
ADDED : ஆக 07, 2025 08:12 AM
தேனி : 'கல்தார்' எனும் வளர்ச்சி ஊக்கி பயன்படுத்தினால் மா மரங்களின் வளர்ச்சி பாதிக்கும் என தோட்டக்கலை துறை துணை இயக்குனர் நிர்மலா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 9240 எக்டேர் பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மா மரங்களில் அறுவடை முடிந்த பின் மரத்தில் காய் பிடிப்பதற்காகவும், பூக்கும் தன்மையை மேம்படுத்த சிலர் கல்தார் என்ற வளர்ச்சி ஊக்கி மருந்தை பயன்படுத்துகின்றனர். இந்த மருந்தினை பயன்படுத்துவதால் மா மரத்தின் இயற்கை வளர்ச்சி, ஆரோக்கியம் பாதிக்கும். இம்மருந்து மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை பாதித்து, மண்வளத்தை கெடுக்கும். இதனால் மாம்பழங்களின் சுவை, சதைப்பகுதி, தரம் குறையும். பயன்படுத்தினால் மரங்களின் வளர்ச்சி மாறுபடும். அதனால் விவசாயிகள் கல்தார் மருந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

