ADDED : அக் 18, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.22ல் துவங்கி அக்.28ல் முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இக் கோயிலில் பழநி தண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் பூஜை உள்ளிட்ட ஐதீகங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 38ம் ஆண்டு கந்த சஷ்டி விழா அக்.22ல் துவங்குகிறது. முருகனுக்கு அக்.27 வரை பல்வேறு சிறப்பு பூஜைகளும், அக்.28ல் திருக்கல்யாணமும் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை இந்து தேவஸ்தான குழுவின் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.