/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பி.எம்.ஐ., 18 முதல் 23 சதவீதம் வைத்து கொண்டால் சர்க்கரை நோயை விரட்டலாம் : உலக சர்க்கரை நோய் தின கருத்தரங்கில் தகவல்

ADDED : நவ 13, 2025 12:16 AM
தேனி: உடலில் 18 முதல் 23 சதவீதம் வரை (பாடி மாஸ் இன்டெக்ஸ்) உடல்நிறை குறியீட்டு எண் அளவில் எடையை குறைத்து கொண்டால் சர்க்கரை நோயை விரட்டலாம்.'' என தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த உலக சர்க்கரை நோய் தின கருத்தரங்கில் ' உடல்பருமனும் சர்க்கரை நோயும்' என்ற தலைப்பில் மதுரை உடல்பருமன் மருத்துவ நிபுணர் ஆனந்தகுமார் அண்ணாமலை பேசினார்.
அவர் பேசுகையில் இந்தியாவில் பி.எம்.ஐ., குறியீடு 23க்கு மேல் உள்ளவர்கள் அதிகம். அதனால் சர்க்கரை நோய் பாதிப்பும் அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாதது என நினைக்கின்றனர். அது தவறு. உடல்நிறை குறியீட்டு எண் (பி.ம்.ஐ.,) 18 முதல் 23 வரை எடையை குறைத்து, இடுப்பு சுற்றளவின் ஆண்கள் 90 செ.மீ.,க்குள்ளும், பெண்கள் 80 செ.மீ.க்குள் வைத்துக் கொள்வதும், கெட்ட கொழுப்பு 25 சதவீதம் பெண்ணுக்கும், ஆண்களுக்கு 30 சதவீதம் வைத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய் பாதிப்பு இன்றி வாழலாம். இதற்கு சரிவிகித உணவை நேரம் தவறாமல் சாப்பிட்டு, மன அழுத்தம் இன்றி உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்., என்றார். நிகழ்ச்சியை முதல்வர் முத்துச்சித்ரா துவக்கி வைத்தார். துறைத் தலைவர் டாக்டர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் முத்து, துணை முதல்வர் டாக்டர் கவிதா, நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமரன் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் ஈஸ்வரன், மணிமொழி, வெங்கடேஷ், சொப்னஜோதி பங்கேற்றனர். வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.