தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பிரசாரத்திற்கு கேரளா ஜீப்களுக்கு ' கிராக்கி '

 பிரசாரத்திற்கு கேரளா ஜீப்களுக்கு ' கிராக்கி '

 பிரசாரத்திற்கு கேரளா ஜீப்களுக்கு ' கிராக்கி '


ADDED : ஏப் 10, 2026 05:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 05:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி:தேர்தல் பிரசாரத்திற்கு கேரள ஜீப்களுக்கு 'கிராக்கி' ஏற்பட்டுள்ளதால் மினி லாரி,ஆட்டோ க்களை பயன்படுத்த கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு கேரளா ஜீப்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும். ஓட்டு சேகரிக்க திறந்த வெளியில் நின்று ஜீப்பில் பிரசாரம் செய்வதற்கும், ஆதரவாளர்களை ஏற்றி செல்ல கேரள ஜீப்புகளை பயன்படுத்துவது வழக்கம்.

பெரும்பாலும் கேரளாவில் பிரசாரத்திற்கு ஜீப்புகளை அதிகம் பயன்படுத்துவது இல்லை. ஆனால் தமிழகத்தில் கேரளா ஜீப்களுக்கு வரவேற்பு உள்ளது. ஏனென்றால் ரோடு வசதி இல்லாத பகுதிகளுக்கு எளிதாக செல்லும் என்பதால் பிரசாரத்திற்கு கேரளா ஜீப்புகளை புக்கிங் செய்வதில் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அ.தி.மு.க., வினர் 10 நாட்களுக்கு முன்பு முப்பது மேற்பட்ட கேரளா ஜீப்புகளை புக்கிங் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தி.மு.க.,வினரும் ஜீப், ஆட்டோக்களை புக்கிங் செய்து பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். புதிதாக போட்டியிடும் வேட்பாளர்கள் கேரளா ஜீப்களை புக்கிங் செய்வதற்கு தேடி அலைகின்றனர். ஜீப்கள் கிடைக்காத நிலையில் பிரசாரத்திற்கு மினி டெம்போ, ஆட்டோக்களை பயன் படுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us