ADDED : ஏப் 03, 2026 04:04 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி முத்துகிருஷ்ணாபுரம் ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி
கிருபாஸ்ரீ, பெங்களூரில் 'கேலோ இந்தியா அஷ்மிதா கிக் பாக்சிங்' சார்பில் நடந்த 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தென் மண்டல போட்டியில் தங்கப்பதக்கம், ரூ.8000 ரொக்கப் பரிசும் பெற்றார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு பையனூரில் நடந்த தேசிய போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் கிருபா ஸ்ரீ, மீண்டும் ஒரு தங்கப்பதக்கமும் ரூ.12 ஆயிரம் ரொக்கப் பரிசும் பெற்றுள்ளார். தென் மண்டலம்,தேசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவியை பள்ளி நிறுவனர் முருகன், இயக்குனர் கயல்விழி, பள்ளி முதல்வர் சுரேஷ் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
