ADDED : செப் 04, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.5–தேனி நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள லைப் இன்னவேஷன் பப்ளிக் பள்ளி, வடபுதுப்பட்டி லைப் இன்னவேஷன் பப்ளிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் நாராயணபிரபு தலைமை வகித்தார். மாணவர்கள் கிருஷ்ணர், ருக்மணி வேடம் அணிந்து மாறுவேடப்போட்டியில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சியாமளா கவுரி, ஆசிரியைகள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
