ADDED : ஆக 25, 2026 04:10 PM
தேனி, ஆக.
26–கிருஷ்ணஜெயந்தி விழா செப்.,4ல் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கான உற்ஸவ நிகழ்ச்சிகள் பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் இன்று துவங்குகிறது. தினசரி மாலை 6:00 மணிக்கு ஆன்மிக பேச்சாளர் ஸ்ரீனிவாசன் சொற்பொழிவாற்றுகிறார், இரவு 7:30 மணிக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. ஆக.,29 காலை கோவிந்த பட்டாபிஷேகம், செப்.,2 காலை ராதா கல்யாணம், செப்.,4 மாலை 6:00 மணிக்கு கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடக்கிறது. கோகுலாஷ்டமி அன்று குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வரலாம். 92454 39344 என்ற அலைபேசியில் முன்பதிவு செய்ய வேண்டும். பங்கு பெறும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என பிரார்த்தனை மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். உற்சவ பூஜை, பூக்கள்,பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க உதவலாம் என்றும் தெரிவித்துள்ளனர். ஏற்பாடுகளை காட் இந்தியா டிரஸ்ட் செய்து வருகின்றனர்.
