sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஒரு வாரத்திற்குள் சேதமடைந்த கூடலுார் மெயின் பஜார் ரோடு - பேட்ச் ஒர்க் பார்த்து சமாளிப்பு

/

 ஒரு வாரத்திற்குள் சேதமடைந்த கூடலுார் மெயின் பஜார் ரோடு - பேட்ச் ஒர்க் பார்த்து சமாளிப்பு

 ஒரு வாரத்திற்குள் சேதமடைந்த கூடலுார் மெயின் பஜார் ரோடு - பேட்ச் ஒர்க் பார்த்து சமாளிப்பு

 ஒரு வாரத்திற்குள் சேதமடைந்த கூடலுார் மெயின் பஜார் ரோடு - பேட்ச் ஒர்க் பார்த்து சமாளிப்பு


ADDED : ஜன 20, 2026 06:11 AM

Google News

ADDED : ஜன 20, 2026 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் மெயின் பஜாரில் புதிதாக ரோடு அமைத்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்ததால் பேட்ச் ஒர்க் பார்த்து சமாளித்துள்ளனர்.

கூடலுார் ராஜாங்கம் சிலையிலிருந்து பள்ளிவாசல் வரையுள்ள மெயின் பஜாரில் ரூ.1 கோடி மதிப்பில் கழிவு நீரோடையுடன், தார் ரோடு அமைக்கும் பணி சமீபத்தில் துவங்கியது.

வியாபார நிறுவனங்கள் அதிகம் உள்ள மெயின் பஜாரில் போக்குவரத்தும் அதிகம். மேலும் மழைக்காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் காட்டாற்று வெள்ள நீர் மெயின் பஜார் வழியாக ஓடும்.

அதனால் அகலமாக கழிவு நீரோடை அமைத்து, தரமான முறையில் ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தனர்.

ஆனால் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றாமல் பெயரளவில் கழிவு நீரோடை அமைக்கும் பணி முடிந்தவுடன் பழைய ரோட்டை தோண்டாமல் ஒரே நாளில் 2 கி.மீ., தூரமுள்ள ரோட்டை தார் போட்டு முடித்தனர். இரண்டு நாட்களில் ஜல்லிக் கற்கள் பல இடங்களில் பெயர்ந்தது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பல தரப்பில் இருந்து புகார் சென்றது. இந்நிலையில் நேற்று ஜல்லிக்கற்கள் வெளி யேறிய இடங்கள் முழுவதும் பேட்ச் வேலை செய்து சமாளித்தனர்.

கன மழை பெய்தால் ரோடு முழுவதும் பெயர்ந்து சேதமடையும் வாய்ப்புள்ளது.

கூடுதல் பயன்பாட்டில் உள்ள மெயின் பஜாரில் தரமாக ரோடு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us