/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காய்கறிகளில் சிற்பம் போட்டி கூடலுார் மாணவி முதலிடம்
/
காய்கறிகளில் சிற்பம் போட்டி கூடலுார் மாணவி முதலிடம்
காய்கறிகளில் சிற்பம் போட்டி கூடலுார் மாணவி முதலிடம்
காய்கறிகளில் சிற்பம் போட்டி கூடலுார் மாணவி முதலிடம்
ADDED : டிச 11, 2025 06:06 AM

கூடலுார்: மாநில அளவில் நடந்த காய்கறியில் சிற்பம் செதுக்கும் போட்டியில் கூடலுார் என்.எஸ்.கே.பி. பள்ளி மாணவி நவதன்யஸ்ரீ முதலிடம் பெற்றார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி புதுக்கோட்டை யில் நடந்தது.
இதில் காய்கறியில் சிற்பம் செதுக்கும் போட்டியில் கூடலுார் என்.எஸ்.கே.பி. பள்ளி மாணவி நவதன்யஸ்ரீ முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
வெற்றி பெற்ற மாணவியையும், பயிற்சி அளித்த காய்கறி சிற்பக் கலைஞர் இளஞ்செழியனையும், பள்ளி தாளாளர் ராம்பா, தலைவர் பொன்குமரன், பொருளாளர் சிவாபகவத், நிர்வாகக் குழு உறுப்பினர் கர்ணபிரபு, தலைமை ஆசிரியர் வெங்கட்குமார், ஓவிய ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.