தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ நிலப்பறவைகள் கணக்கெடுப்பு

 நிலப்பறவைகள் கணக்கெடுப்பு

 நிலப்பறவைகள் கணக்கெடுப்பு


ADDED : பிப் 16, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: மாவட்டத்தில் வனத்துறை சார்பில் 26, மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் 35 என மொத்தம் 61 இடங்களில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.

வனத்துறை சார்பில் ஆண்டிபட்டி , அகமலை, குரங்கனி, தம்புரான்கானல், அத்தியுத்து, தேவாரம், சோத்துப்பாறை, முத்துக்கோம்பை உள்ளிட்ட 12 காப்புகாடு பகுதிகள், 6 கிராம பகுதி, 8 நகர்பகுதி என மொத்தம் 26 இடங்களிலும், புலிகள் காப்பகம் சார்பில் 35 இடங்கள் என 61 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. கணக்கெடுப்பில் தன்னார்வலர்கள், துறை அலுவலர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். தன்னார்வலர்களுக்கு வனத்துறை சார்பில் நேற்று முன்தினம் மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் மெர்லின் என்ற செயலியை பயன்படுத்தினர். இந்த செயலி பதிவகும் பறவைகளின் ஒலியை வைத்து அந்த பறவையின் பெயரை கூறும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. என வனத்துறையினர் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us