/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மண் சரிவு: சீரமைப்பு பணிகள் துவக்கம்
/
மண் சரிவு: சீரமைப்பு பணிகள் துவக்கம்
ADDED : நவ 03, 2025 04:26 AM

மூணாறு: கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே கூம்பன்பாறை லட்சம் வீடு காலனி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணி துவங்கியது.
அங்கு அக்.25 இரவில் மண்சரிவு ஏற்பட்டு லட்சம் வீடு காலனியில் ஒருவர் பலியானார். பத்து வீடுகள் சேதமடைந்தன.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் ரோட்டில் மண், கற்கள் ஆகியவை குவிந்ததால், அந்த வழியில் மூணாறுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் அடிமாலியில் இருந்து கல்லார்குட்டி, வெள்ளத்துாவல், ஆனச்சால் வழியாக மூணாறுக்கு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்புப் பணிகள் நேற்று துவங்கியது. அப்பணிகளை 2 நாட்களுக்குள் முடிக்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

