தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ நிலச்சரிவு அபாயம்: மண் அகற்றும் பணி துவக்கம்

நிலச்சரிவு அபாயம்: மண் அகற்றும் பணி துவக்கம்

நிலச்சரிவு அபாயம்: மண் அகற்றும் பணி துவக்கம்


UPDATED : ஜூலை 07, 2026 10:36 PM

ADDED : ஜூலை 07, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2026 10:36 PM ADDED : ஜூலை 07, 2026 10:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூணாறு:மூணாறில் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ள பகுதியில் மண் அகற்றும் பணி துவங்கியது.

மூணாறு-கொச்சி இடையே ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. அதற்கு பழைய மூணாறு அருகே ரோட்டில் மண் எடுக்கப்பட்டது. அப்பகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டு கட்டடங்கள் சேதமடைந்தன. அங்கு நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக தெரிந்ததால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், புவியியல் வல்லுனர்கள் விரிசல் ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். கலெக்டர் தினேசன் செருவாட்டிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். தொடர்ந்து கலெக்டர் உத்தரவில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் மண்ணை அகற்றும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் துவங்கினர். இப்பணிகள் முடிந்து 10 முதல் போக்குவரத்து சீராகும் என அதிகாரிகள் கூறினர். விரிசல் ஏற்பட்ட பகுதியில் உள்ள தங்கும் விடுதி, ஓட்டல்களை பாதுகாப்பு கருதி அதிகாரிகள் பூட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us