/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ்சில் மாயமான லேப்டாப் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
/
பஸ்சில் மாயமான லேப்டாப் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
பஸ்சில் மாயமான லேப்டாப் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
பஸ்சில் மாயமான லேப்டாப் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : அக் 12, 2025 05:35 AM
ஆண்டிபட்டி : மதுரையில் இருந்து ஆண்டிபட்டிக்கு சென்ற தனியார் பஸ்சில் பயணியின் ரூ.3 லட்சம் மதிப்பிலான லேப்டாப்கள் இருந்த சூட்கேஸ் மாயமானது. உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டில் மீட்டு ஆண்டிபட்டி போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
ஆண்டிபட்டி குமராபுரத்தை சேர்ந்தவர் ஆபுதீன், அவரது மகள் மதுபாலா 25, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.
விடுமுறைக்காக சென்னையில் இருந்து வந்தவர் நேற்று காலை 8:00 மணிக்கு மதுரையிலிருந்து தனியார் பஸ்சில் ஆண்டிபட்டிக்கு வந்தார். அவரது உடைமைகளை பஸ் ஊழியர்கள் பொருட்கள் வைக்கும் கேபினில் வைத்திருந்தனர்.
உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டில் இறங்கிய பயணிகளின் பொருட்களை இறக்கி வைத்த போது பஸ் ஊழியரின் கவனக்குறைவால் மதுபாலாவின் லேப்டாப் இருந்த சூப் கேசையும் இறக்கி வைத்துள்ளனர்.
உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்டில் இறங்கிய பயணிகள் தங்களின் பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டனர். ஆண்டிபட்டியில் இறங்கிய மதுபாலா தான் கொண்டு வந்த சூட்கேஸை தேடிய போது காணவில்லை. பதட்டத்துடன் ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார். ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் பஸ் ஊழியர்களிடம் விசாரித்தனர்.
அப்போது மதுபாலாவின் சூட்கேஸ் தவறுதலாக உசிலம்பட்டியில் இறக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இது குறித்து உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டில் ஆண்டிபட்டி போலீசார் விசாரித்தனர்.
கேட்பாரற்று கிடந்த சூட்கேஸை ஆட்டோ டிரைவர் ஒருவர் எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது.
ரூ.3 லட்சம் மதிப்பிலான லேப்டாப்களை மீட்டு போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.