ADDED : மார் 05, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலூர் மூனுசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை 53, வழக்கறிஞர்.
சில தினங்களுக்கு முன் வெட்டுக்காட்டில் உள்ள தென்னந்தோப்பு வீட்டில் தூங்கினார். இரவில் மாடியில் இருந்து தவறி விழுந்தார். பலத்த காயமடைந்தவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கிருந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக லோயர்கேம்ப் போலீசார் விசாரிக்கின்றனர்.
