ADDED : அக் 23, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: லட்சுமிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன் தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில், திருச்சியில் வழக்கறிஞர் உமாசங்கர் கொலைசெய்யப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் ஆறுமுகம், இணைச் செயலாளர் லோகநாதன், துணைச் செயலாளர்மகாலிங்கம் ஆகியோர் பேசினர்.
மூத்த வழக்கறிஞர்கள் கணேசன், கமல்ராஜ், செல்லப்பாண்டி, வித்யா,பாண்டியராஜன், ஆனந்தன் மற்றும் பலர் பங்கேற்றனர்.