ADDED : டிச 16, 2025 06:12 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்ட நீதிமன்றம் முன் தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் இ பைலிங் முறையை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரியும், வழக்கறிஞர்கள் சேம நல நிதியை ரூ.25 லட்சமாக அதிகரிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
செயலாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பாலமுருகன், கணேஷ், தமிழ்மணி, லோகநாதன், வித்யா, கமல்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
