ADDED : செப் 07, 2026 09:40 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.8–
தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலைவர் சந்தான கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். உச்சநீதிமன்ற வழக்கில் வருஷநாடு, மேகமலை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். இதில் துணை தலைவர்கள் பாலமுருகன், கணேசன், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்னறனர். செப் 8 ல், (இன்று) தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என்றனர்.
