UPDATED : நவ 25, 2026 06:37 PM
ADDED : நவ 25, 2026 06:37 PM
அ நிறம் | அளவு
தேனி: மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி தீபத்துாணில் தீபம் ஏற்றாத தமிழக அரசை கண்டித்து தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம், பா.ஜ., வழக்கறிஞர்கள் பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகி பாபு தலைமை வகித்தார். பா.ஜ., வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகி லோகநாதன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் ரதிதேவி, பாண்டிய ராஜன், பாலமுரளி, ரத்னகுமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
