UPDATED : ஜூன் 30, 2026 09:15 PM
ADDED : ஜூன் 30, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
கூடலுார்:கேரளா வண்டிப்பெரியாறு அருகே கிராம்பி குடியிருப்பு பகுதிகளில் மக்கள் வளர்த்து வந்த பசுக்களை புலி தாக்கி இறந்ததாக வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். அப்பகுதியில் முகாமிட்ட வனத்துறையினர் கால் தடங்களை வைத்து புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனால் சில நாட்களுக்கு முன் புலியைப் பிடிக்க கூண்டு வைத்து வனத்துறையினர் காத்திருந்தனர். இந்நிலையில் ஜூன் 29 இரவு கூண்டில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுத்தை சிக்கியது.
சிறுத்தை சிக்கியது ஓரளவு மக்களுக்கு அச்சத்தை போக்கினாலும், சமீபத்தில் பசுக்களை வேட்டையாடியது புலியா, சிறுத்தையா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இருந்தபோதிலும் சமீபத்தில் பசுக்களை வேட்டையாடியது தற்போது கூண்டில் சிக்கிய சிறுத்தையா என்ற ஆய்வை துவக்கியுள்ளனர்.
