/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாங்க கற்றுக்கொள்வோம் விழிப்புணர்விற்கு அழைப்பு தீயணைப்பு அலுவலர் தகவல்

ADDED : அக் 10, 2025 03:35 AM
தேனி: மாவட்டத்தில் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் பொது மக்கள் பங்கேற்கும் வகையில் வாங்க கற்றுக்கொள்வோம்' என்ற தலைப்பில் அக்.11, 12 ல் தீ விபத்துக்களை அறிவோம், உயிர்களை காப்போம் என்ற கருத்து குறித்து விழிப்புணர்வு வழங்க உள்ளதாக மாவட்ட தீயணைப்பு மீட்பு பணி அலுவலர் ஜெகதீஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இந்நிகழ்ச்சி அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் 2 நாட்கள் நடக்க உள்ளன. இருநாட்களிலும் காலை 10:00 முதல் 11:00 மணி, மதியம் 12:00 முதல் 1:00 மணி, மாலை 4:00 முதல் 5:00 மணி வரை ஒரு மணி நேரம் இடைவெளியில் தீயணைப்பு நிலையங்களுக்கு தன்னார்வமாக வரும் பொது மக்கள், இளைஞர்களுக்கு தீ விபத்துக்கள், தீயணைக்கும் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு கல்வியும், எலக்ட்ரிக் தீ விபத்து, எல்.பி.ஜி., தீ விபத்து, பேரிடர் கால விபத்து மீட்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு கல்வி இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள் ஒரு மணி நேரம் விழிப்புணர்வு பெறலாம். ஒவ்வொரு நிலையங்களிலும் நிலைய தீயணைப்பு அலுவலர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.