/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை தாராளம்
/
பெரியகுளம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை தாராளம்
பெரியகுளம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை தாராளம்
பெரியகுளம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை தாராளம்
ADDED : நவ 09, 2025 06:52 AM
பெரியகுளம்: பெரியகுளம் தாலுகா பகுதிகளில் 24 மணி நேரமும் தடையின்றி மதுபாட்டில் விற்பனை தாராளமாக நடக்கிறது. இதனால் சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது.
பெரியகுளம் புது பஸ்ஸ்டாண்ட், அரசு போக்குவரத்து டெப்போவிலிருந்து சுடுகாடு ரோடு, மூன்றாந்தல், தேவதானப்பட்டி பஸ்ஸ்டாண்ட், சுடுகாடு, கெங்குவார்பட்டி சுடுகாடு, டி.கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, தாமரைக்குளம் கண்மாய் கரை உட்பட பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில் விற்பனை அமோகமாக நடக்கிறது.
சிறு தொழில் போல் பலரும் டாஸ்மாக்கில் மதுபாட்டில்கள் மொத்தமாக வாங்கி, குவார்ட்டர் பாட்டில் ரூ.50 முதல் ரூ.60 வரையும், ஆப்பாட்டில் ரூ.60 முதல் ரூ.80 வரையில் விற்பனை செய்கின்றனர். பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை இயக்கியது. பொதுமக்கள் தொடர்போராட்டத்தால் கடை அகற்றப்பட்டது.
ஆனால் அப்பகுதியில் தனியார் மது பாரை அகற்ற பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசியல்வாதிகள்,போலீசார் மறைமுக ஆதரவு உள்ளதால் அகற்ற முடியவில்லை.
வழிப்பறி கொள்ளை: பெரியகுளம் பஸ்ஸ்டாண்டில் இரவில் பெரும்பாலான பஸ்கள் செல்வதில்லை. இதனால் பயணிகள் ஒரு கி.மீ., தூரம் கடந்து தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர். நடந்து செல்வோரிடம் வழிப்பறி நடக்கிறது. இதனால் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் சுழற்சி முறையில் 24 மணி நேரம் செயல்படும் புறக்காவல் நிலையம் உருவாக்கப்பட்டு ஒரு நாள் மட்டும் செயல்பட்டது.
மறுநாள் முதல் மூடிய புறக்காவல் நிலையம் ஓராண்டாகியும் திறக்கவில்லை.
இதுபோன்ற காரணங்களால் பெரியகுளம் பகுதியில் 24 மணி நேரமும் கள்ள மார்கெட்டில் மது பாட்டில் விற்பனை தடையின்றி தாராளமாக நடக்கிறது.
இதனால் சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. கள்ள மார்கெட்டில் மது விற்பனையை போலீசார் தடுக்க வேண்டும்.

