ADDED : மார் 30, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் எம். சாண்ட் கொண்டு செல்ல கேரளாவிற்கு 80 சதவீத பாஸ்களும், தேனி மாவட்டத்திற்குள் கொண்டு செல்ல 20 சதவீத பாஸ்கள் மட்டும் வழங்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு லாரி உரிமையாளர்களும், டிரைவர்களும் பங்கேற்றனர்.
ஒரு வாரமாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.