ADDED : செப் 28, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத் பீடன் ஆண்டிபட்டி அருகே புள்ளிமான் கோம்பை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள தனியார் குவாரியிலிருந்து உடை கற்கள் ஏற்றிச்சென்ற லாரியின் அனுமதி சீட்டை சரிபார்த்துள்ளார்.
அதில் 11.51 மணிக்கு அனுமதி சீட்டின் முடியும் நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. நேரம் கடந்து 12.45 மணிக்கு லாரி சென்றதால் இது குறித்து விசாரித்த போது டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார். பிடிபட்ட லாரி சண்முக சுந்தரபுரம் வி.ஏ.ஓ., சிந்துதேவியிடம் ஒப்படைக்கப்பட்டது. வி.ஏ.ஓ., புகாரில் லாரியை பறிமுதல் செய்து க.விலக்கு எஸ்.ஐ., பால்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.