தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/இலவச வீடு கட்டும் திட்ட ஒதுக்கீடு குறைவு

இலவச வீடு கட்டும் திட்ட ஒதுக்கீடு குறைவு

இலவச வீடு கட்டும் திட்ட ஒதுக்கீடு குறைவு


UPDATED : நவ 15, 2026 03:23 PM

ADDED : நவ 15, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 03:23 PM ADDED : நவ 15, 2026 03:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: இலவச வீடு கட்டும் திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைவான இலக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊராட்சி செயலர்கள் புலம்புகின்றனர்.

அரசு சார்பில் இலவச வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் இத்திட்டத்தில் வீடுகள் கட்டுமான பணிக்கு ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.5 லட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது.

ஊராட்சி செயலர்கள் கூறுகையில், ‘இலவச வீடு கட்டும் திட்டத்தில் தேனி மாவட்டத்திற்கு 500 வீடுகள் கட்டுவதற்கு மட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அதனை பிரித்து வழங்க வேண்டும். இதனால் ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைந்த அளவு ஒதுக்கீடு தான் கிடைக்கும். ஆண்டிபட்டி ஒன்றியதில் அதிக குடிசை வீடுகள் உள்ளதால், அங்கு அதிக இலக்கீடு வழங்கும் நிலை உள்ளதாக கூறுகின்றனர். இதனால் மற்ற ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டால் சிரமமாக இருக்கும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us