/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பசுமையாக காட்சி தரும் நெல் வயல்கள்
/
பசுமையாக காட்சி தரும் நெல் வயல்கள்
ADDED : நவ 26, 2025 04:00 AM

போடி: சமீபத்தில் பெய்த மழையால் போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் நெல் நடவு பணி முடிந்ததால் நெல் வயல்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.
அக்டோபர் கடைசி, நவ., ல் பெய்த மழையால் சாமிகுளம், சங்கரப்பன் கண்மாய், செட்டிகுளம், பங்காருசாமி கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய்களில் நீர் தேக்கம் அதிகரித்து உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதனையொட்டி மீனாட்சிபுரம், பொட்டல் களம் பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. மீனாட்சியம்மன் கண்மாயில் நீர் தேங்கியுள்ளதால் ஆண்டு தோறும் ஒரு போக நெல் சாகுபடி இப்பகுதியில் நடைபெறும். நாற்றாங்கால் அமைத்து நெல் நடவு செய்யப்படும் பணியானது 25 முதல் 35 நாட்கள் வரை நடக்கும். நெல் நடவு பணிகள் மும்முரமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது நெல் வயல்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.

