தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மானியத்தில் மக்காச்சோளம் விதை, இடுபொருட்கள்

மானியத்தில் மக்காச்சோளம் விதை, இடுபொருட்கள்

மானியத்தில் மக்காச்சோளம் விதை, இடுபொருட்கள்


ADDED : செப் 01, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி. செப். 2– -

மாவட்டத்தில் மக்காச்சோள சாகுபடியை அதிகரிக்க மானியத்தில் மக்காச்சோள விதைகள், இடு பொருட்கள் வழங்க உள்ளதாக போடி வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது : தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 80 எக்டேரில் மக்காச் சோளம் செயல் விளக்கத்திடல் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு ஒரு எக்டருக்கு ரூ.11500 மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இதனுடன் 15 கிலோ மக்காச்சோளம் விதை, 12.5 கிலோ நுண்ணூட்ட சத்து கலவை, ஒரு லிட்டர் திரவ அசோஸ் ஸ்பைரில்லம், திரவ பாஸ்போ பாக்டீரியா, 4 கிலோ மெட்டாரைசியம் (நன்மை செய்யும் பூஞ்சானம்) வழங்கப்பட உள்ளது. ஒரு விவசாயி அதிகபட்சம் 5 ஏக்கர் வரை பயன் பெறலாம். செயல் விளக்க திடல் 10 எக்டர் சேர்ந்த தொகுப்பாக அமைக்கப் பட வேண்டும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் நகல்,புகைப்படத்துடன் அருகில் உள்ள வேளாண் உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us