தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ சபரிமலையில் மகரஜோதி தரிசனம்:: முன்னேற்பாடுகள் துவக்கம்

 சபரிமலையில் மகரஜோதி தரிசனம்:: முன்னேற்பாடுகள் துவக்கம்

 சபரிமலையில் மகரஜோதி தரிசனம்:: முன்னேற்பாடுகள் துவக்கம்


ADDED : ஜன 04, 2026 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 07:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சபரிமலை: மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலையில் வனத்துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

சபரிமலையில் கடந்த 27-ம் தேதி நிறைவு பெற்ற மண்டல சீசனில் தொடக்கத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதன் பின்னர் நிலைமை சீரானது. இந்த சீசனில் மொத்தம் 36 லட்சத்து 33 ஆயிரத்து 192 பக்தர்கள் தரிசனம் செய்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 30-ம் தேதி மகர விளக்கு சீசனுக்காக நடை திறந்து நேற்று வரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 496 பேர் சபரிமலை வந்துள்ளனர்.

ஜன.14-ல் மகரஜோதி தரிசனம் நடக்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளது. அட்டதோடு முதல் நீலிமலை வரை உள்ள திருவாபரண பாதையின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. பம்பை - நுணங்காறுக்கு இடையே தற்காலிக பாலம் அமைக்கும் பணி 12-ம் தேதிக்கு முன்னர் முடிவடையும். பெருவழிப் பாதையில்அழுதை கடவு, கல்லிடும் குன்று, வள்ளித்தோடு, வெள்ளாறம்செற்றை, புதுச்சேரி, கரிமலை, வலியானவட்டம் ,சிறியான வட்டம் ஆகிய எட்டு பக்தர் தங்குமிடங்களில் சுற்றுச்சூழல் அபிவிருத்தி கமிட்டிகள் செயல்படுகிறது. யானை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்காணிப்பதற்காக அழுதை - பம்பை, பம்பை - சன்னிதானம், சத்திரம் - சன்னிதானம் பாதைகளில் வனத்துறையின் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல இந்த பாதைகளில் சிசிடிவி கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பம்பை மற்றும் சன்னிதானத்தில் இருந்து காட்டுப் பன்றிகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சத்திரம், உப்பு பாறை பாதையில் நேரடி கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பம்பை, சன்னிதானம், புல்மேடு ஆகிய இடங்களில் யானை தடுப்பு படையை சேர்ந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புல் மேட்டில் போலீசின் தற்காலிக வயர்லெஸ் மையம் அமைக்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. காட்டுப்பாதைகளில் பக்தர்களுக்கு உதவுவதற்காக வனத்துறை சார்பில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

மகரஜோதி நாளில் புல்மேட்டில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.புல் மேட்டில் மகரஜோதி தெரியும் இடங்களில் இடுக்கி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us