ADDED : ஜன 22, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
போடி: போடி அருகே நாகலாபுரம் புண்ணியம்மன் கோயில் தெரு ராதாகிருஷ்ணன் 37. சென்னையில் தங்கி போர்வெல் வேலை செய்து வருகிறார்.
இவர் நாகலாபுரம் சாவடி தெருவை சேர்ந்த மதன்குமாரின் தங்கை மவுனிகாவை 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு மவுனிகா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு ராதாகிருஷ்ணன் தான் காரணம் என நினைத்து மதன்குமார் அடிக்கடி தகராறு செய்துள்ளார். பொங்கல் விடுமுறைக்காக குடும்பத்துடன் ராதாகிருஷ்ணன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
தங்கை தற்கொலைக்கு நீ தான் காரணம் என கூறி ராதாகிருஷ்ணனை மதன்குமார் கத்தியால் குத்தி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தள்ளார். ராதாகிருஷ்ணன் புகாரில் போலீசார் மதன்குமாரை கைது செய்தனர்.
